Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'காதல் என்பது பொதுவுடமை' திரைப்படம்!

எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம்!

-

- Advertisement -

பொதுவாக திரைத்துறையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பிரம்மாண்டமாக வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களை விட சிறிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன. எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'காதல் என்பது பொதுவுடமை' திரைப்படம்!அந்த வகையில் தற்போது காதல் என்பது பொதுவுடமை என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகினி, அனுஷா பிரபு, தீபா கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைக்க ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படமானது ரசிகர்கள் பார்த்து பழக்கம் இல்லாத ஒரு காதல் கதை என சொல்லப்படுகிறது. அதேசமயம் குடும்பப் பின்னணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டு இருக்கிறது. எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'காதல் என்பது பொதுவுடமை' திரைப்படம்!இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், “பொதுவாக காதலர் தினத்தில் இளைஞர்களை கவரும் காதலை மையமாகக் கொண்ட படங்கள் தான் வெளியாகும். ஆனால் எங்களுடைய காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் இளைஞர்களையும் குடும்பங்களையும் ஈர்க்கும் படமாக இருக்கும். ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ