Homeசெய்திகள்சினிமாகாதல் தி கோர் படத்திற்கு எதிர்ப்பு.... கிறிஸ்துவ நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாக புகார்...

காதல் தி கோர் படத்திற்கு எதிர்ப்பு…. கிறிஸ்துவ நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாக புகார்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் ஜோ என செல்லமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோதிகா தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பல பெண்ணியம் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள திரைப்பம் காதல் தி கோர். மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஜியோ பேபி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மம்முட்டி கம்பெனி இந்த படத்தை தயாரித்து உள்ளது.

தொடக்கத்தில் ஓடிடி தளத்தில் காதல் தி கோர் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது, படத்தில் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. மேலும், படத்தின் வெளியீட்டுக்கு முன்பே கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் காதல் தி கோர் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டன.

இந்நிலையில், காதல் தி கோர் படத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்படம் நவம்பர் 23-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கிறிஸ்துவத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தன்பாலின ஈர்ப்பாளர்களை காட்டிப்படுத்த கிறிஸ்துவ நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் கேரள கத்தோலிக்க திருச்சபை பாதிரியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

MUST READ