Homeசெய்திகள்சினிமாயூடியூபில் முன்னணி வகிக்கும் கபிலன் வைரமுத்து பாடல்கள்

யூடியூபில் முன்னணி வகிக்கும் கபிலன் வைரமுத்து பாடல்கள்

-

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வௌியானது. இதைத் தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாள் அன்று, தி கோட் படத்திலிருந்து இரண்டாவது பாடல்  ‘சின்ன சின்ன கண்கள்’ வெளியானது. இப்பாடலை விஜய் பாடி இருந்தார். பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது.
இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருந்தார். இதேபோல ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படத்தில் வெளியான காலண்டர் பாடலுக்கும், கபிலன் வைரமுத்து வரிகள் எழுதி இருந்தார். . முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.
தற்போது இந்த இரண்டு பாடல்களும் யூடியூப் இந்திய வரிசையில், முதல் 2 இடங்களைப் பெற்றுள்ளன. கபிலன் வைரமுத்து ‘இந்தியன் 2’ படத்தில் வசனமும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ