Homeசெய்திகள்சினிமா'கடைசி உலகப் போர்', 'கோழிப்பண்ணை செல்லதுரை' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது!

‘கடைசி உலகப் போர்’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது!

-

கடைசி உலகப் போர் 

பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி கடைசியாக பீட்டி சார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. 'கடைசி உலகப் போர்', 'கோழிப்பண்ணை செல்லதுரை' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது!அதைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி, கடைசி உலகப் போர் எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து அனகா, நட்டி நடராஜ், நாசர், சிங்கம் புலி, முனீஸ் காந்த், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். போர் தொடர்பான கதைகளத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்ததாக இவர் இயக்கியிருந்த கடைசி உலகப்போர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வந்தது. இருப்பினும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் (அக்டோபர் 25) நாளை டென்ட் கொட்டா ஓடிடிக்கு தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 24) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கோழிப்பண்ணை செல்லதுரை'கடைசி உலகப் போர்', 'கோழிப்பண்ணை செல்லதுரை' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் கோழிப்பண்ணை செல்லதுரை. இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். கிராமத்து கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் இன்று (அக்டோபர் 24) சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ