Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் ட்ரெண்டாகும் 'கடைசி உலகப் போர்' பட டிரைலர்!

இணையத்தில் ட்ரெண்டாகும் ‘கடைசி உலகப் போர்’ பட டிரைலர்!

-

கடைசி உலகப் போர் படத்தின் டிரைலர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.இணையத்தில் ட்ரெண்டாகும் 'கடைசி உலகப் போர்' பட டிரைலர்!பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடைசியாக பிடி சார் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி, கடைசி உலகப் போர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஹிப் ஹாப் ஆதி தனது ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கும் நிலையில் அவரே படத்தினை இயக்கி இதற்கு இசையும் அமைத்துள்ளார். ஏற்கனவே இவர் இயக்கியிருந்த மீசைய முறுக்கு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் இயக்கியுள்ள கடைசி உலகப் போர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் இணையத்தில் படு ட்ரெண்டாகி வருகிறது.

போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து அனகா, நட்டி நடராஜ், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ