மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்
- Advertisement -

மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் காதல் தி கோர் திரைப்படம் வரும் நவம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.
ஜோதிகா தனது திருமணத்தைத் தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கையில் ஒரு இடைவெளி எடுத்தாலும், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய திரையில் மீண்டும் வந்தார் மற்றும் கடந்த ஆண்டு தனது மைல்கல்லான 50 வது படத்தில் நடித்துள்ளார் .

கடந்த 2021-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றத மலையாள திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இப்படத்தை இயக்குநர் ஜியோ பேபி இயக்கி இப்படத்தை தொடர்ந்து, தற்போது அவர் காதல் தி கோர் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் மலையாள நட்சத்திரம் மம்மூட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாள திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்முட்டி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளவின் கொச்சி பகுதியில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், காதல் தி கோர் படம் நவம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.