காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் தான் காதலிக்க நேரமில்லை. ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாக்கி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் வினய் ராய், லால் ஆகியோரும் இவர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் பின்னணி வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோவும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து என்னை இழுக்குதடி எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை விவேக் எழுதி இருக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமான் மற்றும் தீ ஆகியோர் இணைந்து பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.