காதலிக்க நேரமில்லை படத்தில் இருந்து லாவெண்டர் நேரமே எனும் பாடல் வெளியாகி உள்ளது.ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனுடன் இணைந்து யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கென், லட்சுமி ராமகிருஷ்ணன், லால், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது என்னை இழுக்குதடி எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.
அதைத்தொடர்ந்து தற்போது லாவெண்டர் நேரமே எனும் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடலை ஆதித்யா, அலெக்ஸாண்ட்ரா ஜாய் ஆகியோர் பாடியுள்ள நிலையில் மசூக் ரஹ்மான் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.