காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து லால், வினய் ராய், யோகி பாபு, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். காவெமிக் அரி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். எமோஷனல் கலந்த ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வருகின்றன.
Get ready to mend your broken heart with the break up anthem from #KadhalikkaNeramillai, song drops tomorrow at 6 PM.
All set for this Pongal, January 14th, 2025!
An @arrahman musical 🎶@actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @tseriessouth @MashookRahman… pic.twitter.com/wpYyXlIokr
— Red Giant Movies (@RedGiantMovies_) January 3, 2025
அந்த வகையில் ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் குரலில் வெளியான என்னை இழுக்குதடி பாடல் இணையத்தில் செம வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து லாவெண்டர் நேரமே எனும் பாடலும் வெளியானது. அடுத்ததாக IT’S A BREAKUP DA எனும் புதிய பாடல் நாளை (டிசம்பர் 4) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.