Homeசெய்திகள்சினிமாஎன்றும் இனியவை பட்டியலில் காதல் மன்னன் பாடல்

என்றும் இனியவை பட்டியலில் காதல் மன்னன் பாடல்

-

25 ஆண்டுகளாக மனதில் நீங்க இடம் பிடித்த பாடல்கள். காதல் மன்னன் படத்தின் பாடல் குறித்து பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம்  திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படம் குறித்து பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை பெரும் அளவு கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனை தொடர்ந்து இயக்குநர் சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல கூட்டணியாக மாறியது.

இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிந்தை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார்.

அதில், படத்தின் பாடல் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) – B (பரத்வாஜ்) – C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

MUST READ