Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் 'கைதி 2' படப்பிடிப்பு?

அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் ‘கைதி 2’ படப்பிடிப்பு?

-

- Advertisement -

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைதி திரைப்படம் வெளியானது. அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் 'கைதி 2' படப்பிடிப்பு?கார்த்தி நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சாம் சி எஸ் – இன் இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் எல்சியு படங்களாக வெளிவந்த விக்ரம், லியோ ஆகிய படங்களிலும் கைதி படத்தின் குறியீடுகள் இடம் பெற்றிருந்தது. இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் கைதி 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தை இயக்கி வருவதால் அதை முடித்துவிட்டு 2025 ஆம் ஆண்டில் இறுதிக்குள் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே இப்படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் 'கைதி 2' படப்பிடிப்பு?அதுமட்டுமில்லாமல் கைதி முதல் பாகத்தில் கதாநாயகிகள் யாரும் நடிக்காத நிலையில் கைதி 2 திரைப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது. இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் சமயத்தில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படாது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ