Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் காஜல்

இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் காஜல்

-

- Advertisement -

காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார். அப்போது அங்கு எடுத்த புகைப்படத்தில் முகத்தை ஹார்ட் ஸ்டிக்கர் வைத்து மறைத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, நடித்து வந்த அவர் தனது தனது மகன் நீல்காக சினிமாவில் இருந்து சிறு இடைவெளி எடுத்துக் கொண்டார். புதிய அம்மாவாக தனது நேரத்தை அனுபவித்து, தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு கிளம்பினார்.

காஜல் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, தனது படப்பிடிப்பு பணியை மீண்டும் தொடங்கியுள்ளார். இயக்குனர் எஸ். ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்- 2 படத்தில் நடிக்கும் நடிகை காஜல், அந்த படத்திற்கான படப்பிடிப்பை நடிக்க தொடங்கினார்.

ஒரே வண்ணமுடைய படத்தை ட்வீட் செய்து தனது முகத்தில் ராட்சத பிங்க் நிற ஹார்ட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது, அந்தப் படத்தில் இருந்து தனது தோற்றத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதில் காஜல், “#இந்தியன்2 #வருகிறது” என்று ட்விட் செய்துள்ளார்.

MUST READ