Homeசெய்திகள்சினிமாகடலுக்குள் கலைஞரின் பேனா சின்னம்- ஒன்றிய அரசு அனுமதி

கடலுக்குள் கலைஞரின் பேனா சின்னம்- ஒன்றிய அரசு அனுமதி

-

- Advertisement -

கடலுக்குள் கலைஞரின் பேனா சின்னம்- ஒன்றிய அரசு அனுமதி

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது.

கலைஞரின் எழுத்தை அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகம் படுத்த வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் திமுக அரசு மெரினா கடலுக்குள் கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்திருந்தது.

கடலுக்குள் கலைஞரின் பேனா சின்னம்- ஒன்றிய அரசு அனுமதி

நினைவு சின்னத்தை உடைப்பேன்:

பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவகத்தது. அதன் கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் சிலை வைத்தால் உடைப்பேன் என்று ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கலைஞரின் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் என இரண்டும் இருந்தாலும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

கடலுக்குள் கலைஞரின் பேனா சின்னம்- ஒன்றிய அரசு அனுமதி

அதனால் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் கலைஞர் நினைவிடத்திற்குப் பிற்பகுதியில் கடலுக்குள் 30மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு  கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கடலுக்குள் 81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை கலைஞர் நினைவிடத்தில் இருந்து சென்றடையும் வகையில் 290மீ தூரத்திற்கு கடற்கரை, 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது.

கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில் நிபுணர் குழு 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடற்படை பாதுகாப்பு தளமான ஐஎன்எஸ் அடையாரிடம் தடை இல்லா சான்றிதழ் பெறவேண்டும், நிலத்தடி நீரை பயன்படுத்தகூடாது, கட்டுமானத்திற்கு பயன்படுத்தபடும் பொருட்களின் கழிவுகளை அங்கேயே கொட்டகூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தான் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் கலைஞரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளது.

MUST READ