Homeசெய்திகள்சினிமாகலையரசன், ஷேன் நிகாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்'.... டீசர் குறித்த அறிவிப்பு!

கலையரசன், ஷேன் நிகாம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’…. டீசர் குறித்த அறிவிப்பு!

-

மெட்ராஸ்காரன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.கலையரசன், ஷேன் நிகாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்'.... டீசர் குறித்த அறிவிப்பு!நடிகர் கலையரசன் ஆரம்பத்தில் மெட்ராஸ், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். பின்னர் டார்லிங் 2, ஹாட்ஸ்பாட் போன்ற பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றார்.

அதே சமயம் மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், RDX போன்ற படங்களின் மூலம் கேரளாவையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் ஷேம் நிகாம்.

தற்போது ஷேன் நிகாம், கலையரசன் இருவரும் இணைந்து தமிழில் மெட்ராஸ்காரன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா, பாண்டியராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்க எஸ் ஆர் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கலையரசன், ஷேன் நிகாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்'.... டீசர் குறித்த அறிவிப்பு!பிரசன்னா எஸ் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ