Homeசெய்திகள்சினிமாசுந்தர்.சி இயக்கும் 'கலகலப்பு 3'..... கதாநாயகி யார் தெரியுமா?

சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 3’….. கதாநாயகி யார் தெரியுமா?

-

- Advertisement -

பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, கலகலப்பு, அரண்மனை போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றி பெற்று வருகிறார். சுந்தர்.சி இயக்கும் 'கலகலப்பு 3'..... கதாநாயகி யார் தெரியுமா?அதிலும் இவர் இயக்கிய கலகலப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, சந்தானம், அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த கலகலப்பு திரைப்படம் கடந்த 2012 இல் வெளியானது. பின்னர் கலகலப்பு 2 திரைப்படத்தையும் இயக்கினார் சுந்தர் சி. அதைத்தொடர்ந்து நடிகர் சுந்தர் சி கலகலப்பு 3 திரைப்படத்தையும் இயக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளிவந்தது.சுந்தர்.சி இயக்கும் 'கலகலப்பு 3'..... கதாநாயகி யார் தெரியுமா? அதேசமயம் தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கி முடித்த சுந்தர் சி, கலகலப்பு 3 படத்தின் வேலைகளை தொடங்கி விட்டாராம். அதன்படி கலகலப்பு 3 படத்தில் விமல் மற்றும் மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்போது இது தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.சுந்தர்.சி இயக்கும் 'கலகலப்பு 3'..... கதாநாயகி யார் தெரியுமா? அதன்படி நடிகை வாணி போஜன் கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகை வாணி போஜன், சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெள்ளித்திரையில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ