Homeசெய்திகள்சினிமாநெல்சனுக்கும் விலை உயர்ந்த காரா?.... வாரி வழங்கும் கலாநிதி மாறன்!

நெல்சனுக்கும் விலை உயர்ந்த காரா?…. வாரி வழங்கும் கலாநிதி மாறன்!

-

ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கும் விலை உயர்ந்த கார் ஒன்றை கலாநிதிமாறன் பரிசளித்துள்ளார்.

ரஜினி, நெல்சன் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் தமிழகம் மட்டும் இல்லாமல் கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பாக உலகம் முழுவதும் 525 கோடிக்கு மேல் ஜெயிலர் திரைப்படம் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவிலேயே எந்த திரைப்படமும் எட்டாத வசூலை இப்படம் குறுகிய காலத்தில் எட்டியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ரஜினிக்கு காசோலை ஒன்றையும் BMW X7 கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனை நேரில் சந்தித்த கலாநிதிமாறன் காசோலையை பரிசாக வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவருக்கும் புத்தம் புதிய போர்ஷே கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MUST READ