Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..... என்னன்னு தெரியுமா?

ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்….. என்னன்னு தெரியுமா?

-

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்து தற்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் இப்படம் 575 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. மிகக் குறுகிய நாட்களில் அதிக வசூலை பெற்று தந்த வரலாற்று சாதனையை ஜெயிலர் திரைப்படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கலாநிதிமாறன் ரஜினிக்கு காசோலை ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு பரிசை வழங்கியுள்ளார். ரஜினியின் இல்லத்திற்கு சென்று விலை உயர்ந்த BMW X7 ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பல வகையான கார்கள் ரஜினிக்கு காட்டப்பட்டதாகவும் அவர் இந்த காரை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருக்கிறது.

MUST READ