ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத காரணத்தால் அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருந்தார். அதேசமயம் ரஜினியும் அண்ணாத்த படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஜெயிலர் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தது. தற்போது நெல்சன் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தரமான சம்பவத்தை செய்துள்ளார். அந்த வகையில் இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
Mr.Kalanithi Maran congratulated @Nelsondilpkumar and handed over a cheque to him, celebrating the Mega Blockbuster #Jailer #JailerSuccessCelebrations pic.twitter.com/b6TGnGaFd6
— Sun Pictures (@sunpictures) September 1, 2023
தமிழில் எந்த படமும் இதுவரை காணாத வரலாற்று சாதனையை ஜெயிலர் திரைப்படம் அடைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு காசோலை ஒன்றையும், BMW X7 என்ற விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து தற்போது இயக்குனரான நெல்சனுக்கும் காசோலையை பரிசாக வழங்கியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.