Homeசெய்திகள்சினிமாகல்கி 2898 ஏடி படக்குழு மீது ஹாலிவுட் கலைஞர் குற்றச்சாட்டு... விளக்கம் கொடுக்காமல் தவிர்க்கும் படக்குழு...

கல்கி 2898 ஏடி படக்குழு மீது ஹாலிவுட் கலைஞர் குற்றச்சாட்டு… விளக்கம் கொடுக்காமல் தவிர்க்கும் படக்குழு…

-

நாளை வெளியாகும் 'கல்கி 2898AD' முதல் பாடல்...... ப்ரோமோ வீடியோ வெளியீடு!
பிரபல பான் இந்தியா நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம், கல்கி 2898ஏடி. இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் நாக் அக்ஸின் இயக்கி இருக்கிறார். இவர் தெலுங்கில் நடிகையர் திலகம் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி தேசிய அளவில் விருதுகள் வென்று பேசப்பட்டவர் ஆவார். இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கல்கி.

பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898AD' ..... டிரெய்லர் ரிலீஸ் எப்போது?

இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.

13 மொழிகளில் திரையிடப்படும் பிரபாஸின் 'கல்கி 2898AD'!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைக் கண்ட தென்கொரிய ஓவியக் கலைஞர் சுங் சோய் என்பவர், தான் 10 வருடங்களுக்கு முன்பாக வரைந்த ஓவியங்களை கல்கி டிரைலரில் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டினார். அனுமதி இல்லாமல் கலைப்படைப்பை பயன்படுத்துவது மிகவும் மோசமானது என்று அவர் சாடினார். இதேபோல, ஆலிவெர் பெக் என்பவரும், தான் ஸ்டார் டிரெக்கிற்காக செய்து வைத்திருந்த பணிகளை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் திருடிவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால், இதுவரை இந்த குற்றச்சாட்டு குறித்து படக்குழு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால், இது உண்மைதானா என ரசிகர்களும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

MUST READ