Homeசெய்திகள்சினிமாமுன்பதிவில் மாஸ் காட்டும் பிரபாஸின் கல்கி ஏடி 2898

முன்பதிவில் மாஸ் காட்டும் பிரபாஸின் கல்கி ஏடி 2898

-

பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் கல்கி ஏடி 2898. இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இத்திரைப்படம் தேசிய விருதுகளை வென்று குவித்தது. இந்நிலையில், தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தான் கல்கி. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கல்கி திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்திற்கான புரமோசன் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மேலும் படத்திற்கான முன்பதிவுகளும் தொடங்கிவிட்டன. அமெரிக்காவில் இதுவரை முன்பதிவில் மட்டும் ஒரு மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

MUST READ