பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள கல்கி திரைப்படத்திலிருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பான் இந்திய நடிகராக சர்வதேச அளவில் கலக்கி வரும் நடிகர் பிரபாஸ். தெலுங்கு சினிமாவில் சொற்ப அளவில் திரைப்படங்களில் நடித்து வந்த பிரபாஸின் இமேஜை, உலகம் முழுவதும் தூக்கிச் சென்ற திரைப்படம் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம். இப்படத்தின் மூலம் பிரபாஸ் மற்றும் ராணா இருவரும் இந்திய அளவில் பிரபலம் அடைந்தனர். இருப்பினும், பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ, ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, தற்போது அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.