Homeசெய்திகள்சினிமாசூறாவளி வேகத்தில் 300 கோடியை நெருங்கிய 'கல்கி 2898AD'!

சூறாவளி வேகத்தில் 300 கோடியை நெருங்கிய ‘கல்கி 2898AD’!

-

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கல்கி 2898AD. இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார். சூறாவளி வேகத்தில் 300 கோடியை நெருங்கிய 'கல்கி 2898AD'!மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அது மட்டும் இல்லாமல் துல்கர் சல்மான் போன்றோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை வாரி குவித்து வருகிறது. மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் வெளியாகி இருந்த இந்த படம் இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது என்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் முதல் நாளில் 191.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. சூறாவளி வேகத்தில் 300 கோடியை நெருங்கிய 'கல்கி 2898AD'!இதனை பட குழுவினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இரண்டாவது நாளில் இந்த படம் 107 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதாவது ஒட்டு மொத்தமாக உலக அளவில் இரண்டே நாட்களில் இந்த படம் 298. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே விரைவில் இந்த படம் 500 கோடியை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ