Homeசெய்திகள்சினிமாகல்கி பட பாடல் படப்பிடிப்பு... இத்தாலி பறந்த படக்குழு...

கல்கி பட பாடல் படப்பிடிப்பு… இத்தாலி பறந்த படக்குழு…

-

பல மொழிகளில் உருவாகும் கல்கி படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் இத்தாலி நாட்டிற்கு சென்றிருக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார் நடிகர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ, ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார்.

சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அதாவது கல்கி 2898 AD.இப்படம் இந்திய திரை உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார்.

வரும் மே மாதம் 9-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் இத்தாலி சென்றிருக்கின்றனர். இத்திரைப்படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி ஆங்கில மொழியிலும் உருவாகி வருகிறது.

MUST READ