Homeசெய்திகள்சினிமாகலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத கமல்...... ஏன்?

கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத கமல்…… ஏன்?

-

கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின் கலை கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட நினைவிடம் புனரமைக்கப்பட்டது. கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத கமல்...... ஏன்?சமீபத்தில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு அரசியல் பிரமுகர்களும் வைரமுத்து, ரஜினிகாந்த் போன்ற திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நினைவிடத்தை பார்த்து வியந்த ரஜினிகாந்த், ‘இது கலைஞரின் நினைவிடம் அல்ல தாஜ்மஹால்’ என்று கூறியிருந்தார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் ஏன் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர். கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத கமல்...... ஏன்?இந்நிலையில் அது சம்பந்தமான பதில் கிடைத்துள்ளது. அதாவது கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. எனவே கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள செர்பியா சென்றுள்ள காரணத்தால் கலைஞரின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் ஏ ஆர் ரகுமான் இவர்களை இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ