நகைச்சுவை நடிகர் சார்லி, பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் நடிகராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். அதன் பின்னர் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் பிரெண்ட்ஸ் படத்தில் அவருடைய கோபால் என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் பணியாற்றி வரும் சார்லி சுமார் 800க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சார்லியின் இளைய மகன் அஜய் தங்கசாமிக்கு சமீபத்தில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு திரைப்படங்கள் பலரும் திரண்டு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அஜய் தங்கசாமியின் திருமண வரவேற்பு விழா நடைபெற்ற நிலையில் அந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -