கைதி 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் கைதி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கி இருந்த விக்ரம், லியோ ஆகிய படங்களிலும் கைதி படத்தின் குறியீடுகள் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் தான் லோகேஷ், கார்த்தி கூட்டணியில் கைதி 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதன்படி லோகேஷ் கனகராஜ் ஒரு பக்கம் கூலி திரைப்படத்தை இயக்கி வந்தாலும் மற்றொரு பக்கம் கைதி 2 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையில் இந்த படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் கைதி 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை அணுகிய போது, அவர் தேதியை முடிவு செய்துவிட்டு தன்னிடம் சொல்லுங்கள் எனவும் அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் எனவும் கூறியுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. ஏற்கனவே கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் கமல்ஹாசன் இதில் நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி இருக்கிறது.