Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் கமல்ஹாசன்!

‘தக் லைஃப்’ படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் கமல்ஹாசன்!

-

நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். 'தக் லைஃப்' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் கமல்ஹாசன்!நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம், கமல் கூட்டணி தக் லைஃப் படத்துக்காக இணைந்துள்ளதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அப்ப படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் காரணத்தால் அரசியலில் பிசியாக இருப்பதால் தேர்தலுக்குப் பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 'தக் லைஃப்' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் கமல்ஹாசன்!இருப்பினும் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதன்படி இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன், ஆளவந்தான், மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் போன்ற பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ