Homeசெய்திகள்சினிமா"எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள்" - இயக்குனர் கே.பாலச்சந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

“எத்தனை படங்கள்… அத்தனையும் பாடங்கள்” – இயக்குனர் கே.பாலச்சந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

-

- Advertisement -

இயக்குனர் K.பாலச்சந்தரின் நினைவு நாளை முன்னிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

"எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள்" - இயக்குனர் கே.பாலச்சந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்தமிழ்த் திரை உலகில் தனது புதுமையான படைப்புகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் K.பாலச்சந்தர். வசனகர்த்தாவாக திரைவாழ்வை தொடங்கி தற்போது மாபெரும் ஆளுமைகளாக இருக்கும் பல்வேறு நட்சத்திரங்களை உருவாக்கிய ‘சிகரம்’ என்ற பெருமைக்கு சொந்தகாரர். கலையுலகில் நீங்காப் புகழுக்கு வித்தாக திகழும் இயக்குநர் கே.பாலச்சந்தரின் நினைவு நாள் இன்று.

இயக்குநர் சிகரம் என்றும் அழைக்கப்பட்ட K. பாலச்சந்தர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் சிகரம் பாலச்சந்தர். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய பெருமைக்குரியவர்.

ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என K.பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியலின் நீளம் அதிகம்.

படங்கள் பார்த்துவிட்டு, அவை மனதைப் பாதித்துவிட்டால், உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதியும், நேரில் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். ’16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறிவிட்டார் பாரதிராஜா!.

கமல்ஹாசன் – K. பாலச்சந்தர்-க்கும் இடையில் உண்டான பரஸ்பரம் பெரியது. குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணமா’ படத்தில் அறிமுகமாகி ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை ஹீரோவாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசன் கேபி என் வாத்தியார் என உருக்கத்துடன் பல மேடைகளிலும் குறிப்பிடுவார். எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு பொன்விழா ஆண்டு என K.பாலச்சந்தரின் 91-வது பிறந்தாளில் (9 ஜீலை 2021) நினைவு கூர்ந்தார்.

"எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள்" - இயக்குனர் கே.பாலச்சந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

இந்நிலையில் K..பாலச்சந்தர் நினைவுநாளை முன்னிட்டு அவர் பற்றி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.

”எத்தனை படங்கள்… அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

கவனம் ஈர்க்கும் ‘பேபி & பேபி’ பட டீசர்!

MUST READ