Homeசெய்திகள்சினிமாதனது அடுத்த படத்தின் தலைப்பை வைரமுத்துவிடம் ரகசியமாக சொன்ன கமல்ஹாசன்!

தனது அடுத்த படத்தின் தலைப்பை வைரமுத்துவிடம் ரகசியமாக சொன்ன கமல்ஹாசன்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் தலைப்பினை வைரமுத்துவிடம் ரகசியமாக கூறியுள்ளார் எனது தகவல் வெளியாகி இருக்கிறது.தனது அடுத்த படத்தின் தலைப்பை வைரமுத்துவிடம் ரகசியமாக சொன்ன கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசன் தவிர சிம்பு, திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது 2025 ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராக வருகிறது. இதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன், அன்பஅறிவ் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக KH237 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பினை நடிகர் கமல்ஹாசன் ரகசியமாக வைரமுத்துவிடம் கூறியுள்ளாராம்.

இது தொடர்பாக வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நீண்ட நாள் கழித்து தனது நண்பர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அரசியல், கலை, சமூக ஊடகங்கள் தொடர்பாக பேசியதாகவும் அப்போது கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் தலைப்பை தன்னிடம் சொன்னதாகவும் உடனே தான் அந்த தலைப்பை மாற்ற வேண்டாம் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ