Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2'...... ஜூன் மாதமும் ரிலீஸ் இல்லையா?

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’…… ஜூன் மாதமும் ரிலீஸ் இல்லையா?

-

- Advertisement -

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2.கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2'...... ஜூன் மாதமும் ரிலீஸ் இல்லையா? சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. ஏனென்றால் 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படமும் சேனாதிபதி தாத்தாவின் கதாபாத்திரமும் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர், கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம், இந்தியன் முதல் பாகத்தைப் போல ஊழலுக்கு எதிரான கதை களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி ஒரு வழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. ஆகவே படத்தினை 2024 ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2'...... ஜூன் மாதமும் ரிலீஸ் இல்லையா?ஆனால் இந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் அதனால் படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை எனவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பை லைக்கா நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ