Homeசெய்திகள்சினிமா5000 திரைகளில் திரையிடப்படும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2'!

5000 திரைகளில் திரையிடப்படும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’!

-

கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 5000 திரைகளில் திரையிடப்படும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2'!இந்த படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கையாண்டுள்ளார்.

கடந்த 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் பல சிக்கல்களைத் தாண்டி இந்த படம் நாளை (ஜூலை 12 அன்று) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.5000 திரைகளில் திரையிடப்படும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2'! மிக பிரம்மாண்டமாக ஊழலுக்கு எதிரான கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை காண பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி டிக்கெட் முன் பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படமானது தமிழ்நாட்டில் 750 திரைகளிலும் உலகம் முழுவதும் 5000 திரைகளிலும் திரையிடப்பட உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கிட்டத்தட்ட 4000 திரைகளில் திரையிடப்பட்டது. அதைவிட ஆயிரம் திரைகள் கூடுதலாக இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் எங்கும் ரிலீஸாக உள்ளது.

MUST READ