பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் பல பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றியதாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ரெட்ரோ, டிராகன், பைசன் என பல தமிழ் படங்களையும் ஹிட் 3, VD12 என பல தெலுங்கு படங்களையும் கைப்பற்றி இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தையும் கைப்பற்றி இருப்பதாக அறிவித்திருக்கிறது.
தக் லைஃப் திரைப்படமானது பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இப்படமானது 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தக் லைஃப் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாகவும் இந்த படம் தியேட்டரிக்கல் ரிலீஸுக்கு பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.