Homeசெய்திகள்சினிமாஅதிரி புதிரியாக வெளியானது இந்தியன் 2 டிரைலர்

அதிரி புதிரியாக வெளியானது இந்தியன் 2 டிரைலர்

-

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியானது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். இந்தியன் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து அசத்திய கமல்ஹாசன் தான் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார். மேலும், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துபடத்தை தயாரித்து உள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் புரமோசன் பணிகளும் தீவிரகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலரை, படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி இந்தியன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ