Homeசெய்திகள்சினிமாஇரட்டை வேடங்களில் கமல்...... 'இந்தியன் 3' இல் பெரிய ட்விஸ்ட் வைத்த சங்கர்!

இரட்டை வேடங்களில் கமல்…… ‘இந்தியன் 3’ இல் பெரிய ட்விஸ்ட் வைத்த சங்கர்!

-

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 இல் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இரட்டை வேடங்களில் கமல்...... 'இந்தியன் 3' இல் பெரிய ட்விஸ்ட் வைத்த சங்கர்!இந்த படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு போன்றோர் நடித்திருந்தனர். கமல் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் மிரட்டி இருந்தார். அதிலும் சேனாபதியாக நடித்திருந்த கமல்ஹாசனின் கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சங்கர். இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா போன்றோர் நடித்துள்ளனர். இரட்டை வேடங்களில் கமல்...... 'இந்தியன் 3' இல் பெரிய ட்விஸ்ட் வைத்த சங்கர்!மேலும் மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு, விவேக், மனோ பாலா ஆகியோரும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியன் 2 படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இரட்டை வேடங்களில் கமல்...... 'இந்தியன் 3' இல் பெரிய ட்விஸ்ட் வைத்த சங்கர்! இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த பேட்டியில், “பிளாஷ்பேக் போர்ஷனில் நான் சேனாபதியின் அப்பாவாக நடித்திருக்கிறேன். இதற்காக தான் நீங்கள் இந்தியன் 3 திரைப்படத்தை பார்க்க வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய இரண்டு படங்களிலும் கமல் 12 கெட்டப்பில் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் சேனாபதியின் அப்பாவாக நடித்திருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ