Homeசெய்திகள்சினிமா" இந்தியன் 2 ஒரு சரித்திரம் பேசும் படம்" - இயக்குனர் சங்கரை பாராட்டிய...

” இந்தியன் 2 ஒரு சரித்திரம் பேசும் படம்” – இயக்குனர் சங்கரை பாராட்டிய கமல்

-

1996 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படம் தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது 26ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கமலின் நடிப்பில் இயக்குனர் சங்கரால் இயக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் காஜல் அகர்வால், சித்தார்த் பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏஆர் ரகுமானின் இசையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது

கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா உள்ளிட்ட பல பிரச்சனைகளால் முடங்கியது. அவைகள் எல்லாம் தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஆப்பிரிக்கா, தைவான் போன்ற வெளிநாடுகளிலும் சென்னை, திருப்பதி, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 90 சதவீதம் நிறைவுற்று இப்படம் விரைவில் முழுமையாக நிறைவு பெற உள்ளது.
கமல்ஹாசன் தனது படங்களில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுபவர். அதன்படி கடந்த ஆண்டில் மறைந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இருவரையும் உயிருடன் கொண்டுவரும் பிரத்தியேகமான தொழில்நுட்பத்தை இந்தியன் 2வில் பயன்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இதுவரை இப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதனை பார்த்த கமல் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இப்படம் பாகுபலி கேஜிஎஃப் போன்ற படங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு உருவாகியுள்ளது என்று கமல்ஹாசன் இயக்குனர் சங்கரை பாராட்டியுள்ளார்.

இத்திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்படத்தை விட அருமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இத்திரைப்படம் ஒரு சரித்திரம் பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ரசிகர்கள் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

MUST READ