Homeசெய்திகள்சினிமா'ஜவான்' இசை வெளியீட்டு விழாவில் வீடியோ கால் மூலம் ஷாருக்கானை வாழ்த்திய கமல்ஹாசன்!

‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் வீடியோ கால் மூலம் ஷாருக்கானை வாழ்த்திய கமல்ஹாசன்!

-

கமல்ஹாசன், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கானை வீடியோ காலில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தீபிகா படுகோன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டயின்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் ஷாருக்கான், அனிருத், அட்லீ விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ காலில் தொடர்பு கொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, “நான் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விரும்பினேன். ஆனால் அது முடியவில்லை. இந்திய திரை உலகின் திறமையானவர்களை ஜவான் திரைப்படம் ஒருங்கிணைத்துள்ளது. ஷாருக்கான் 30 ஆண்டுகளாக அன்பின் அடையாளமாக திகழ்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உங்களின் புன்னகை ஒளியாய் திகழ்கிறது. இந்த படம் வெற்றி பெற நான் விரும்புகிறேன். நீங்கள் அனைத்தையும் கண்ணியத்துடன் கையாளும் விதம் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது” என்று ஷாருக்கானை வாழ்த்தியுள்ளார்.

MUST READ