Homeசெய்திகள்சினிமாகேரளாவில் நடைபெறும் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு..... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்!

கேரளாவில் நடைபெறும் ‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு….. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்!

-

- Advertisement -

காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கேரளாவில் நடைபெறும் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு..... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்!தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அடுத்தது ராகவா லாரன்ஸ், காஞ்சனா 4 திரைப்படத்தையும் தானே இயக்கி, நடித்து வருகிறார்.கேரளாவில் நடைபெறும் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு..... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்! இந்தப் படத்தை ராகவா லாரன்ஸின் ராகவேந்திரா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அதே சமயம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் நடைபெறும் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு..... முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்! மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ