Homeசெய்திகள்சினிமாமீண்டும் மீண்டும் தள்ளிப்போன கங்கனாவின் 'எமர்ஜென்சி'..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மீண்டும் மீண்டும் தள்ளிப்போன கங்கனாவின் ‘எமர்ஜென்சி’….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

கங்கனா ரனாவத் நடிக்கும் எமர்ஜென்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் மீண்டும் தள்ளிப்போன கங்கனாவின் 'எமர்ஜென்சி'..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். அதே சமயம் இவர் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் பி வாசு, ராகவா லாரன்ஸ் கூட்டணியில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்தார். மேலும் பல படங்களில் பிஸியாக நடித்து வந்த கங்கனா ரனாவத், கடந்த மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சல் மாநிலம் வண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் கங்கனா ரனாவத், எமர்ஜென்சி எனும் திரைப்படத்தை தானே இயக்கி, தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் கங்கனா, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்திருக்கிறார்.மீண்டும் மீண்டும் தள்ளிப்போன கங்கனாவின் 'எமர்ஜென்சி'..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! 1975 இல் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பலமுறை அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி எமர்ஜென்சி திரைப்திரைப்படம் 2024 செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ