Homeசெய்திகள்சினிமாதேர்தலில் களமிறங்கும் சந்திரமுகி நடிகை... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

தேர்தலில் களமிறங்கும் சந்திரமுகி நடிகை… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

-

- Advertisement -
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுவார் என அவரது தந்தை அமர்தீப் ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தமிழில் ஜெயம்ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் அடுத்த படங்கள் நடிக்கவில்லை. தெலுங்கில் பிரபாஸ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவாக நடித்திருப்பார். அண்மையில் அவரது நடிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படமும் வெளியானது. பி வாசு இயக்கிய இப்படத்தில் சந்திரமுகியா கங்கனா நடித்திருந்தார்.

இதனிடையே, நடிகை கங்கானா ரணாவத் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார். பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இதனால், சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அண்மையில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் கங்கனா. இதையடுத்து, அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதகா தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை கங்கனாவின் தந்தை அமர்தீப் ரணாவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் கங்கனா போட்டியிடுவது உண்மைதான். ஆனால், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என தெரிவித்து உள்ளார்.

MUST READ