Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்த சிக்கலில் சிக்கி தவிக்கும் 'கங்குவா'!

அடுத்தடுத்த சிக்கலில் சிக்கி தவிக்கும் ‘கங்குவா’!

-

- Advertisement -

கங்குவா படம் ரிலீஸாவதில் மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

சூர்யாவின் 42 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.அடுத்தடுத்த சிக்கலில் சிக்கி தவிக்கும் 'கங்குவா'! அந்த வகையில் 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி நவம்பர் 14ஆம் தேதி அன்று காலை 9:00 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில் கடன் தொடர்பான பிரச்சனையினால் கங்குவா திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த கடன் தொகை திரும்ப செலுத்தப்பட்ட நிலையில் தடை நீக்கப்பட்டது. அடுத்தடுத்த சிக்கலில் சிக்கி தவிக்கும் 'கங்குவா'!அடுத்தது தியேட்டர்கள் ஒப்பந்தம் போடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு சிக்கலில் கங்குவா திரைப்படம் சிக்கியுள்ளது. அதாவது கங்குவா படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் பியூவல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 1.60 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் அதை டெபாசிட் செய்ய தவறும் பட்சத்தில் படத்தை வெளியிடக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ