Homeசெய்திகள்சினிமாதளபதி 69 படத்தில் இணைந்த 'கங்குவா' பட நடிகர்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி 69 படத்தில் இணைந்த ‘கங்குவா’ பட நடிகர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

தளபதி 69 படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தளபதி 69 படத்தில் இணைந்த 'கங்குவா' பட நடிகர்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்கப் போவதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் படக்குழு அறிவித்தது. அதைத்தொடர்ந்து இந்த படம் அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகப்போவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்தது. மேலும் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் அக்டோபர் 5இல் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தளபதி 69 படத்தில் இணைந்த 'கங்குவா' பட நடிகர்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் இந்த படத்தில் இணைந்த மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிட இருக்கின்றனர். தற்போது இந்த படத்தில் பாபி தியோல் இணைந்திருப்பதாக பட குழு அறிவித்துள்ளது. பாபி தியோல், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தளபதி 69 படத்திலும் இவர் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ