Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

-

நடிகர் சூர்யாவின் நடிப்பிலும் சிறுத்தை சிவாவின் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். நசாத் யூசப் இதன் எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படமானது மிகப்பிரமாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கிறது. பீரியாடிக் – ஃபேண்டஸி ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வீடியோவும், அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என்று சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ