Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டில் 'கங்குவா' படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

தமிழ் புத்தாண்டில் ‘கங்குவா’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் . இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. இதை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்கை அதிர வைத்தார். தமிழ் புத்தாண்டில் 'கங்குவா' படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!அதன் பிறகு பான் இந்தியா அளவில் களமிறங்க திட்டமிட்ட சூர்யா சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்தார். அதன்படி இந்த கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ளது. அந்த வகையில் 3D தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த படமானது பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீஸரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் படக்குழுவினர் தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சூர்யா பீரியாடிக் போஷன் லுக் மற்றும் தற்போதுள்ள ஸ்டைலிஷான லுக் காட்டப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டில் 'கங்குவா' படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் 2024ல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று பட குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

MUST READ