Homeசெய்திகள்சினிமாஉலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த ‘கங்குவா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் ஒரு வரலாற்று சரித்திர படமாக பீரியாடிக் சம்பந்தமான கதைகளத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படம் நடிகர் சூர்யாவின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாகும். அந்த அளவிற்கு இந்த படத்திற்காக தனது மிகவும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார் சூர்யா. எனவே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து இந்த உலகமே காத்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் மிரட்டலான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ