Homeசெய்திகள்சினிமா'கங்குவா' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்...... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

‘கங்குவா’ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்…… தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

-

'கங்குவா' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்...... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக இப்படம் உருவாகி வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் கங்குவா படம் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்...... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சூர்யா படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார். அதேசமயம் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாகவும் விடுபட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 'கங்குவா' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்...... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!இந்நிலையில் கங்குவா படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ” கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். சூர்யா சாருக்கு தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. ஞானவேல் ராஜா மற்ற மொழிகளில் படத்தை வெளியிட சரியான தேதியை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.'கங்குவா' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்...... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

இதன் மூலம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் உருவாகி வரும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பட குழுவினர் சூர்யா மற்றும் பாபி தியோல் ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ