Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்த மிரட்டலான கங்குவா போஸ்டர்!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்த மிரட்டலான கங்குவா போஸ்டர்!

-

சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் பகுதிகளில் அடர்ந்த காடுகளில் நடைபெற்று வந்தது.

சமீபத்தில் கொடைக்கானல் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதனால் இந்த படம் தொடர்பாக வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை 11 மணியளவில் தங்குவா திரைப்படத்தின் முன்னோட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதன்படி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி அன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடுவதாக படக்குழுவினர் மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் இன்று மற்றுமொரு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர். இதில் THE MAN THE WILD THE STORY என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ