Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் 'கங்குவா'... கண்டிப்பாக இந்த ஆண்டுக்குள்... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சொன்னது என்ன?

தள்ளிப்போகும் ‘கங்குவா’… கண்டிப்பாக இந்த ஆண்டுக்குள்… தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சொன்னது என்ன?

-

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரம்மாண்டமாகவும் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது பீரியாடிக் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. தள்ளிப்போகும் 'கங்குவா'... கண்டிப்பாக இந்த ஆண்டுக்குள்... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சொன்னது என்ன?மேலும் சூர்யாவின் 42வது படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சூர்யாவின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த படத்திற்காக நடிகர் சூர்யா தனது முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார். அவருடைய உழைப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கங்குவா படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்திலும் பார்க்க முடிந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வரும் நிலையில் சமீபகாலமாக இந்த படத்தில் நடிகர் கார்த்தி இணைந்திருப்பதாக சொல்லப்படும் தகவலும் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. எனவே படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக கங்குவா திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தள்ளிப்போகும் 'கங்குவா'... கண்டிப்பாக இந்த ஆண்டுக்குள்... தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சொன்னது என்ன?ஆனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பதால் கங்குவா படத்தில் ரிலீஸ் தேதி நவம்பர் 14 அல்லது நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கங்குவா படத்தில் ரிலீஸ் தள்ளிப் போவதற்கான காரணம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “கங்குவா பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பதால் தனியாக இறங்கினால் தான் அதிக வசூலை எடுக்க முடியும். எனவே நிச்சயம் 2024 ஆம் ஆண்டிற்குள் கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகும்” என்று தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் கங்குவா படத்தில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ