Homeசெய்திகள்சினிமா‘மக்களை கொடுமைப்படுத்திய கங்குவா: படம் பார்த்தவர்களுக்கு நிவாரணம் கொடுங்க’- மாரிதாஸ்

‘மக்களை கொடுமைப்படுத்திய கங்குவா: படம் பார்த்தவர்களுக்கு நிவாரணம் கொடுங்க’- மாரிதாஸ்

-

பான்-இந்தியா மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட தமிழ்த் திரைப்படம் கங்குவா, தயாரிப்பாளர் தெரிவித்தது போல் பாகுபலி 2 விட பெரும் வெற்றி பெறும், ₹2000 கோடி வசூல் செய்யும் என்று கூறினார். ஆனால், படம் வெளியானதும் தீவிரமான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஒலி அளவு அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து ஒலி அளவை குறைக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.

'கங்குவா 2' படத்தின் ஷூட்டிங் எப்போது? ரிலீஸ் எப்போது?

ஒலி அளவு அதிகமாக இருப்பதை காரணம் காட்டி யூடியூப்பர் மாரிதாஸ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கங்குவா 105 டிபி சத்தத்திற்கு மேல் வைத்திருந்தனர் என தகவல். ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை ? 90 டிபி தாண்டினாலே ரோட்டில் மடக்கி பைக் ஹாரன் பிடிங்கி – 10,000 அபராதம் கட்டச் சொல்லி கேட்கும் அரசு, இந்த அளவிற்கு மக்களை கொடுமை செய்துள்ளதாக கூறியும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?

வழக்கு சென்சார் குழு மீதும் போட்டாக வேண்டும். நீதிமன்றம் உரிய நிவாரணத்தை படம் பார்த்த அனைவருக்கும் வழங்க வழி செய்ய வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.

‘‘சென்சார் குழு எதற்காக இருக்கிறது? காலத்திற்கேற்ப ஒளி, ஒலி அமைப்பு போன்ற தொழில் நுட்ப அமைப்பையும் சரிபார்க்க சட்டம் இயற்ற வேண்டும். பொதுவாக 70 டிபி சத்தம் வரை நம் காதுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. 91 டிபி இரண்டு மணி நேரம் கேட்டாலோ 100 டிபி 15 நிமிடம் கேட்டாலோ நம் செவித்திறன் பாதிக்கும். கங்குவா படம் ஓடும் தியேட்டரில் 105 டிபி சத்தம் பதிவாகி இருக்கிறது’’ என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். https://x.com/GaneshGovi1624/status/1857678860315406798

இதற்கு பதிலளித்துள்ள மற்றொரு பதிவர், ‘‘கங்குவா- வை அடக்கம் செய்து 2 நாள் ஆச்சு… இன்னும் எதுக்கு அத புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க ? நாட்ல முக்கியமான விஷயம் நெறய இருக்கு!! உங்களை மாதிரி சோஷியல் மீடியா மன்னர்கள் அதை பற்றி பேசுங்க’’ என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ