Homeசெய்திகள்சினிமாநாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

-

- Advertisement -
நாளை ஒரே நாளில் நான்கு நட்சத்திரங்களின் நான்கு திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.
முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் ஃபைட் கிளப். உறியடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஃபைட் கிளப் படத்தில் விஜய் குமார் நடித்துள்ளார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது

தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களை தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் கண்ணகி. ஸ்க மூன், இ5 நிறுவனங்கள் இணைந்து கண்ணகி படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். படத்தில் அம்மு அபிரதாமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, ஆகியோரும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படமும் நாளை திரையரங்கிற்கு வரவுள்ளது.

அதேபோல, வைபவ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆலம்பனா திரைப்படமும் நாளை வெளியாகிறது. இவருடன் இணைந்து முனீஷ்காந்த், பார்வதி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாரி கே விஜய் இதனை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசை அமைத்துள்ளார்.

நடிகர் சரத்குமார் அண்மையில் அசோக் செல்வனுடன் இணைந்து போர்த்தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமிதாஷூடன் பரம்பொருள் படத்தில் நடித்தார். அடுத்ததாக சசிகுமாருடன் நா நா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். சலீம், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய என் வி நிர்மல் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். கல்பதரு நிறுவனம் நா நா படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படமும் நாளை வௌியாகிறது.

MUST READ