கடந்த ஜனவரி மாதம் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் தான் ஹனுமான். இந்த படத்தில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இவருடன் இணைந்து அமிர்தா, வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய் ராய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது. அந்த அளவிற்கு இந்த படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவை பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்த படத்தில் இறுதியில் இதன் இரண்டாம் பாகமாக ஜெய் ஹனுமான் திரைப்படம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெய் ஹனுமான் படம் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இதில் ஹனுமானாக, காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். ஆரம்பத்தில் ஜெய் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக ரிஷப் ஷெட்டி அந்த ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலா இருந்த ரசிகர்கள் ஹனுமானாக நடிக்க ரிஷப் ஷெட்டி பொருத்தமானவராக இருப்பார் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.